ஒமிக்ரோன் குறித்து அச்சப்படக் கூடாது: உலக சுகாதார அமைப்பு

🕔 December 4, 2021

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் குறித்து உலகம் அச்சப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு தெர-ிவித்துள்ளது.

ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஓராண்டு காலத்துக்கு முன்பு இருந்ததை விட, தற்போதைய சூழல் மாறிவிட்டது என உலக சுகாதார அமைப்பின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான டொக்டர் செளமியா சுவாமிநாதன் நேற்று வெள்ளிக்கிழமை (03) ஒரு கூட்டத்தில் பேசிய போது கூறினார்.

தென்னாபிரிக்காவில் இருந்து வெளியான தரவுகளை மேற்கோள் காட்டி அவர் பேசுகையில்; “ஒமிக்ரான் திரிபு அதிவேகமாக பரவக் கூடியது, இத்திரிபு உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறலாம்” எனவும் குறிப்பிட்டார்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 99 சதவீதத்தினர் டெல்டா திரிபு காரணமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்