‘ஒமிக்ரோன்’ இலங்கையிலும்: அடையாளம் காணப்பட்டார் தொற்றாளர்

🕔 December 3, 2021

மிக்ரோன் எனும் கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. 

நைஜீரியா சென்று – நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

கொவிட் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று, இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தொற்று 29 நாடுகளிலும் இதுவரை மொத்தமாக 372 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் தமது எல்லைகளை மூடியுள்ளதுடன், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்