நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்

🕔 December 2, 2021

லேரியா நோயாளர் ஒருவர் காலி – நெலுவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மலேரியாவினால் பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் இறுதியாக மலேரியா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், மூன்று வருட காலப்பகுதியில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படாததால், இலங்கை மலேரியா நோயற்ற நாடாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்