சமையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளன; பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி: நளின் பண்டார நாடாளுமன்றில் தெரிவிப்பு

🕔 November 29, 2021

சிலின்டரில் உள்ள மையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளமை கனியவள கூட்டுதாபனத்தின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (29) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் பியூட்டேன் மற்றும் ப்ரோப்பேன் என்பன 51:49 என்ற விகிதத்தில் அடங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது.

இது ஒரு பாரதூரமான பிரச்சினை எனவும் அந்த அறிக்கையை விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை நிராகரித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நுகர்வோர் அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைய குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் அதனை வெளியிடுவதற்கான அதிகாரம் தமக்கில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக சமையல் எரிவாயு சிலின்டர்களில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக, தீ விபத்துக்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்