முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார்

🕔 November 14, 2021

ரலாற்று ஆய்வாளரும் பன்நூலாசிரியரும் தகவல் சேகரிப்பாளருமான அறிஞர் எம்.ஐ.எம். முகைதீன் நேற்றிரவு (24) கொழும்பில் தனது 83ஆவது வயதில் காலமானார்.

அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட எம்.ஐ.எம். முகைதீன் கொழும்பில் வசித்து வந்தார்.

சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது – இவர் காலமானார் எனத் தெரியவருகிறது.

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபக செயலாளரான இவர், இலங்கை முஸ்லிம் ஆவண மையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

முஸ்லிம்களுக்கான தனி அலகு குறித்து பேசியும் எழுதியும் வந்த இவர், வரலாற்றில் முதன் முதலாக – முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழுவிலும் இடம்பெற்றார்.

1988ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் – முன்னாள் அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் தலைமையிலான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில், புலிகளின் சென்னை காரியாலயத்தில் நடந்த மேற்படி பேச்சுவார்த்தையின் இறுதியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை, முஸ்லிம்கள் தரப்பில் வடிவமைத்தவர்களில் எம்.ஐ.எம். முகைதீன் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை இடம்பெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்