சுனாமி வீட்டுத் திட்ட மக்களுக்கு, ரஹ்மத் மன்சூர் உதவி

🕔 December 8, 2015
Rahmath Mansoor - 012– எம்.எம். ஜபீர் –

ல்முனை கீறீன் பீல்ட் சுனாமி வீட்டுத் திட்ட குடியிருப்பாளர்களின் சுகாதார நலன் கருதி, நுளம்பு கட்டுப்பாட்டு தெளி கருவியை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.

மேற்படி வீட்டுத் திட்டப் பகுதியில், நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக நுளம்பினால் பரவுகின்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மேற்படி கருவியினை வழங்குமாறு, வீட்டுத் திட்ட முகாமைக் குழுவினர் ரஹ்மத் மன்சூரிடம் வேண்டியிருந்தனர்.

இதனைக் கவனத்திற் கொண்ட ரஹ்மத் மன்சூர், தனது சொந்த நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட நுளம்பு கட்டுப்பாட்டு தெளிகருவியை, கீறீன்பீல்ட் சுனாமி வீட்டுத் திட்ட முகாமைத்துவ குழுவின் தலைவர் ஏ.எல்.எம். கபூலிடம் கையளித்தார்.

இதன்போது, கீறீன் பீல்ட் சுனாமி வீட்டுத் திட்டத்தில் நிலவும் குறைபாடுகளையும் ரஹ்மத் மன்சூர் கேட்டறிந்துகொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்