மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை

🕔 December 6, 2015

Maitripala - 086ஹிந்த ராஜபக்ஷவுடைய பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட 500 ராணுவத்தினரையும் விலக்கிக் கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவின் பாதுகாப்பிற்கு 500 ராணுவத்தினரும் 130 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளனர். எனினும், இதற்கான அனுமதியை பொலிஸ் மற்றும் ராணுவ தலைமையகங்கள் வழங்கியமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லையென தெரிவித்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த வார அமைச்சரவையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்த ஜனாதிபதி மைத்திரி, 500 ராணுவத்தினரையும், 130 பொலிஸாரையும் உடன் மீளப்பெறுமாறு உத்தரவிட்டுள்ளதோடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ள அதேயளவான பாதுகாப்பை மஹிந்தவுக்கு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், தேசிய பாதுகாப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமையவே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் எவ்வளவு செலவிடுகின்றது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டமைக்கிணங்க, நிதியமைச்சரால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்