எரிபொருளை மறைத்து வைக்கும் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

🕔 October 26, 2021

ரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது எரிபொருளை மறைத்து வைத்தாலோ, அது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மக்கள் முறையிடலாம்.

இதற்கான விசேட தொலைபேசி இலக்கமொன்றை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களை எச்சரிக்கும் வகையிலும் இந்த தொலைபேசி இலக்கத்தினைப் பயன்படுத்த முடியும்.

எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு அல்லது அனுப்புவதற்கு மக்கள் 011 5455130 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்