பல்கலைக்கழகங்களை நொவம்பர் தொடக்கம் ஆரம்பிக்க அனுமதி

🕔 October 26, 2021

ல்கலைக்கழகங்களை நொவம்பர் முதலாம் திகதி தொடக்கம், பல கட்டங்களாக மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகங்களை பல கட்டங்களின் கீழ் மீண்டும் நொவம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் எந்தத் திகதியில் திறப்பது என்பது குறித்த அதிகாரம், உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தின் கீழ், இரண்டு வாரங்களுக்கு, முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

மேலும் முதல் கட்டத்தில் 25 சதவீத மாணவர்களைக் கொண்டு மட்டுமே வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்