தரம் 05 மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைப்பு: அமைச்சர் சுசில் நாடாளுமன்றில் அறிவிப்பு

🕔 October 7, 2021

ரம் 05 புலமைப்பரிசில் மற்றும் கபொத உயர்தரப் பரீட்சைகள் அநேகமாக ஒத்திவைக்கப்படலாமெனக் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக மேற்படி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் இன்று(07) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மேற்படி பரீட்சைகள் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கல்வியமைச்சின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் புதிய பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், பெரும்பாலும் 2022 ஆம் ஆண்டு முற்பகுதியில் குறித்த பரீட்சைகள் நடத்தப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட் நிலைமை காரணமாக தரம் 05 மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் பல தடவை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்