வைத்தியர்கள் வேலை நிறுத்தம்; காத்திருந்து, வீடு திரும்பினர் நோயாளிகள்

🕔 December 3, 2015

Strike - docters - 02
– க.கிஷாந்தன் –

ரச வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்தவகையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இங்கு முழு வைத்தியசாலையும் பணிபகிஸ்கரிப்பில் இருந்த போதிலும், விசேட சிகிச்சை பிரிவு மட்டும் வழமையாக நடைபெறுவதை காணக்கூடியதாக இருந்தது.

வரவு – செலவுத் திட்டத்தில் இல்லாமல் செய்யப்பட்ட, வைத்தியர்களுக்கான தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தினை மீண்டு வழங்க வேண்டுமெனவும், மேலும் சில கோரிக்கைகளையும் வலிறுத்தி இன்றிலிருந்து அரச வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.Strike - docters - 03Strike - docters - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்