எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

🕔 December 2, 2015

Courts - Nuwaraeliya - 098
– க. கிஷாந்தன் –

ட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலையொன்றுடன் தொடர்புபட்ட இருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இன்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தார்.

எல்ஜீன் தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ரஜினிகாந்த் (வயது 31), பன்னீர்செல்வம் தியாகராஜா (வயது 29) ஆகிய இருவருக்கு எதிராகவும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜீன் தோட்டத்தில் வசித்த சுப்பையா முருகையா என்பவரை, தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அடித்து கொலை செய்ததாக, சந்தேக நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்தக் கொலைச் சம்பவம் 2007ஆம் ஆண்டு 04 மாதம் 21ம் திகதி நடைபெற்றது.

மேற்படி கொலையுடன் தொடா்பில் 03 பேர் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட போதிலும், அதில் ஒருவர் வழக்கு விசாரணைக் காலத்தில் இறந்து விட்டார்.

இந்த நிலையிலேயே, இன்றைய தினம் மேற்படி இருவருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்