அரச வைத்திய அதிகாரிகள் நாளை வேலை நிறுத்தம்

🕔 December 2, 2015

Nalinda herath - 098ரச வைத்திய அதிகாரிகள் நாளை வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான அழைப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் விடுத்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன், மேலும் சில தொழிற் சங்கத்தினர் நாளை வியாழக்கிழமை நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகிறது.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில், அரச அதிகாரிகளுக்கான தீர்வையற்ற வாகன அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே, நாளைய தினம் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

எனினும், சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்த போதிலும், வைத்திய அதிகாரிகளுக்கு 01 மில்லியன் ரூபா வரையில் கொடுப்பனவொன்றினை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்