தமிழக முன்னாள் முதலமைச்சரின் மனைவி மரணம்: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் ஸ்டாலின்

🕔 September 1, 2021
பன்னீர் செல்வத்துக்கு ஆறுதல் தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

மிழக முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (வயது 66) இன்று (01ஆம் திகதி) காலமானார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தமிழக முன்னாள் முதலமைச்சரின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், உடல் நலமடைந்து மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப இருந்ததாகவும், இந்நிலையில் இன்று அதிகாலை 05 மணியளவில் தீவிர மாரடைப்பு ஏற்பட்டதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உடனடியாக இதயநோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி காலை 6.45 மணியளவில் அவரின் உயிர் பிரிந்ததாகவும் வைத்தியசாலை குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று, முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Comments