ஆசிய சாதனை படைத்த நிந்தவூர் சிறுமி: ஐந்து வயதுக்குள் அசத்துகிறார்

🕔 August 22, 2021

– ஏ.பி.அப்துல் கபூர் –

ம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜே. பாத்திமா அனத் ஜிதாஹ் சாதனைச்சுட்டி (கிரான்ட் மாஸ்டர்) மகுடத்தையும், ஆசிய நாடுகளின் தேசியக் கொடிகளை மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் (Fastest to Identify Flags of all Asian Countries) என்ற படத்தையும் வென்றுள்ளார்.

இச் சாதனையினை ஏற்படுத்திய சிறுமியினை  கௌரவிக்கும் முகமாக அண்மையில் நேற்றைய தினம் அச்சிறுமியின் இல்லத்துக்கு பொது ஜன பெரமுன கட்சியின் கல்முனை அமைப்பாளரும் கிழக்கு மாகாண தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா சென்று பரிசில்கள் வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

அனைத்து ஆசிய நாடுகளின் கொடிகளையும் மிக வேகமாக அடையாளம் கண்ட முதல் ஆசிய சிறுமி இவரேயாவார். 

டிசம்பர் 3, 2016 இல் பிறந்த இவர், தனது 04 வயது 08 மாதங்களில்  அனைத்து 48 ஆசிய நாடுகளின் கொடிகளையும் 24 வினாடிகளில் வேகமாக அடையாளம் கண்டு ஆசிய சாதனை புத்தகத்தில்  தன் பெயரை பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

சிறு வயதிலேயே சிறந்த ஞாபக சக்தியினையும் பல திறமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இவர் எம்.எல்.எம். ஜெஸீம் மற்றும் யு.கே. பாத்திமா ஜவ்ஹறா தம்பதிகளின் புதல்வி ஆவார்.

கிரான்ட் மாஸ்டர் பாத்திமா அனத் ஜிதாஹ்வின் இச்சாதனையை உளமாற பாராட்டுவதாக றிஸ்வி முஸ்தபா இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்