06 நாட்களில் 1000 பேர் மரணம்: கோரத் தாண்டவமாடும் கொவிட்

🕔 August 21, 2021

நாட்டில் கடந்த 06 நாட்களில் 1000 பேர் வரை கொவிட் காரணமாக மரணித்துள்ளனர்.

இம்மாதம் 15ஆம் திகதியில் இருந்து, இன்று 21ஆம் திகதி வரையிலான 06 நாட்களிலேயே இந்த 1000 பேர் பலியாகியுள்ளனர்.

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக, ஆரம்பத்தில் 1000 பேர் மரணிப்பதற்கு 418 நாட்கள் எடுத்திருந்தன.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 2021 மே 21 வரையில் மேற்படி 418 நாட்கள் அடங்கியிருந்தன.

அதன் பின்னர் 1000 பேர் கொவிட் தொற்று காரணமாக மரணிப்பதற்கு 23 நாட்கள் எடுத்திருந்தன.

இந்த நிலையிலே, இறுதியாக கொவிட் தொற்று காரணமாக 06 நாட்களில் 1000 பேர் மரணித்துள்ளனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தகவலின் படி, இன்று (21) இரவு 09 மணி வரையிலான காலப்பகுதியில், கொவிட் காரணமாக மொத்தம் 7,183 பேர் மரணித்துள்ளனர்.

அதேவேளை 03 லட்சத்து 85,696 பேர் – கொவிட் தொற்றுக்கு ஆளாகியதாகவும், அவர்களில் 03 லட்சத்து 23,390 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போது 55,123 பேர் கொவிட் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

தரவுப்படம்: சிஹார் அனீஸ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்