புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது: 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்

🕔 August 18, 2021

புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன வௌியிட்டுள்ளார்.

இந்த வழிகாட்டுதல்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என, அந்த சற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதலின் படி;

* ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும். ஆனால் வேலைக்காக அல்லது சுகாதார வசதியை பெற்றுக் கொள்வதற்காக வெளியே செல்லும் போது – இது பொருந்தாது.

* இன்று (18) தொடக்கம் வணிக வளாகங்கள் முழுமையாக மூடப்படும்.

* பல்பொருள் அங்காடியினுள் ஒரே நேரத்தில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* பகல்நேர பராமரிப்பு மையங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

* உடல் கட்டமைப்பு மையங்கள் மற்றும் உட்புற விளையாட்டரங்குகள் இன்று முதல் மூடப்படும்.

* சிறுவர் பூங்காக்கள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் கடற்கரைகளில் ஒன்று கூடுதல் இன்றிலிருந்து தடைசெய்யப்படும்.

* நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் இன்று முதல் மூடப்படுகின்றன.

* ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை விடுதிகளில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே திறந்திருக்க முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்