ஆப்கானிலுள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து இருக்காது: இலங்கைக்கு தலிபான் உறுதியளிப்பு

🕔 August 17, 2021

லிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்துக்கள் இருக்காது என்று இலங்கைக்கு தலிபான் உறுதியளித்துள்ளது.

‘டெய்லி மிரரர்’க்கு பிரத்யேகமாக பேசிய தலிபான் செய்தி தொடர்பாளரும் சர்வதேச பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷஹீன்; “தலிபான்களுக்கு புலிகள் அமைப்பினருடன் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.

“புலிகளுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் சுயாதீனமான விடுதலை இயக்கம், கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடினோம், ”எனவும் இதன்போது ஷஹீன் குறிப்பிட்டார்.

தோஹாவிலிருந்து டெய்லி மிரர் உடன் தொலைபேசி வழியாக பேசிய போது, அவர் இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான புத்தர் சிலை, தலிபான்களால் 2001ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. பழங்கால மணற்கல் சிற்பங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டமையை இலங்கை உட்பட பல நாடுகள் கண்டித்திருந்தன.

இந்தப் பின்னணியில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது பௌத்த தளங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

இருப்பினும், தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து ஏற்படாது என்று ஷஹீன் உறுதியளித்துள்ளார்.

தலிபான்களை பயங்கரவாதிகளாக இலங்கை கருதக்கூடாது என்று கூறிய ஷஹீன; “உங்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய உங்கள் முன்னோர்களைப் போல், நாங்கள் ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராளிகள். ஆனால் நாங்கள் விஷமப் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்”என்றும் ஷஹீன் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்