ஆப்கான் தலைநகரை சுற்றி வளைத்தனர் தலிபான்கள்: ஆட்சியை ஒப்படைக்கப் போவதாக உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

🕔 August 15, 2021
தலிபான் போராளிகள்

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தலிபான்கள் சூழ்ந்துள்ளனர். அங்குள்ள நகர எல்லையில் காத்திருக்குமாறு தமது போராளிகளை தாலிபன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மக்கள் அதிகம் வாழும் காபூல் நகரில் உள்ளூர் மக்களுக்கு ஆபத்து நேரலாம் என்று கருதி, நகரின் எல்லைகளிலேயே தயாராக காத்திருக்குமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

அதில், தற்போதைக்கு நகரின் பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது. அமைதியான வழியில் ஆட்சிப்பொறுப்பை அரசாங்கம் ஒப்படைப்பது தொடர்பாக அதனுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானியர்களை நாட்டுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு வலியுறுத்தியுள்ள தலிபான்கள், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறுப்புள்ள அரசாங்கம் மூலம் எதிர்கால இஸ்லாமிய அரசு முறைக்கு நாடு மாறுவதை காண வேண்டும் என்று கூறியுள்ளனர்.

எனினும், காபூல் வீதிகளில் தலிபான் போராளிகள் தங்களுடைய கொடிகளை ஏந்தியவாறு நிற்பதையும் சில இடங்களில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியுடன் ஆப்கானிஸ்தான் ஜனாடதிபதி அஷ்ரப் கானி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அங்கு அமைதியான முறையில் ஆட்சி அதிகாரம் தலிபான்கள்வசம் ஒப்படைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.

எனினும், அந்த பிராந்தியத்தில் விரிவாக செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிபிசியின் செய்தியாளர் யால்டா ஹக்கிம், “தாலிபன்கள் தலைநகருக்குள் முன்னேறி வரும்போது பெரிய எதிர்ப்பு காணப்படவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

காபூல் சோதனைச் சாவடிகளில் பணியிலுள்ள அரச படையினர்

தொடர்பான செய்தி: ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்