காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

🕔 November 29, 2015

Body - 01
– க. கிஷாந்தன் –

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த மோகனராஜ் பிரியந்தினி எனும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதி, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வேளையில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், இது குறித்து நேற்றுக் காலை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களால் முறைபாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

யுவதியின் மரணத்துக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக, குறித்த யுவதியின் தாய் தெரிவித்தார்.Body - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்