அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

🕔 August 13, 2021

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்படுவது குறித்து நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் வினவப்பட்டபோது, அவர் இதனைக் கூறினார்.

நாட்டில் தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

180 நாட்களில் செலுத்தும் இணக்கப்பாட்டிற்கு அமைய அந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடனாகப் பெற்ற சீனிக்கான கொடுப்பனவு – டொலர் பெறுமதிக்கு அமைய செலுத்தப்பட வேண்டும்.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதோடு சீனியின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்