கொவிட் தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்படும் செய்தி

🕔 August 12, 2021

மூன்று மாதங்கள் நிறைவடைந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசியை வழங்குவதற்கான விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தலைவர், விசேட வைத்தியர் பிரதீப் சில்வா கூறியுள்ளார்.

இதேவேளை கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கையில் திருப்தி கொள்ளக்கூடியதாக இல்லை என்று மகப்பேறு மற்றும் பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இதனடிப்படையில் சுகாதார அதிகாரி அலுவலகம் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளிலும் கர்ப்பிணி தாய்மாருக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் அனைத்து கர்ப்பிணி தாய்மாருக்கும் தடுப்பூசி வழங்க அரரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் தொற்று காரணமாக இதுவரை 19 கர்ப்பிணி தாய்மார் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

சில கர்ப்பிணி தாய்மார் அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணி தாய்மார் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் எதுவித பிரச்சினையும் இல்லை என்று குடும்ப வைத்திய பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டீ சில்வா தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்