சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிக்க, நுககர்வோர் அதிகார சபை அனுமதி

🕔 August 12, 2021

லாஃப் சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கிணங்க 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கான விலையை 363 ரூபாவினாலும், 05 கிலோ சிலிண்டர் ஒன்றுக்கான விலையை 145 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் சிலிண்டர் 1856 ரூபாவுக்கும், 05 கிலோகிராம் சிலிண்டர் 743 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்.

முன்னர், 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்று 1493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது நாட்டில் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில், இவ்வாறு விலை அதிகரிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்