உம்றா: வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனையுடன் இன்று தொடக்கம் அனுமதி

🕔 August 9, 2021

கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்கள் உம்றா கடமையினைச் செய்வதற்கு இன்று முதல் (09ஆம் திகதி) அனுமதி வழங்கப்படும் என சஊதி அரேபியா அறிவித்துள்ளது.

கொரோனா பரவலையடுத்து, வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு தனது எல்லையை சஊதி அரேபியா மூடி 18 மாதங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக மாதாந்தம் 60,000 உம்றா யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக 20 லட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் சஊதி அரேபியா தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களின் உம்றா யாத்திரைக்கான கோரிக்கையின் போது, கொவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இணைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சஊதி அரேபியாவின் நுழைவு அனுமதி இல்லாத நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்திக்கொண்ட யாத்திரிகர்கள், சஊதியை வந்தடைந்தவுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்