‘ஒன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ள சந்தர்ப்பம்

🕔 August 4, 2021

வாக்காளர் டாப்பில் 2021 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர்களாக பெயர்களை பதிவு செய்யும் பொருட்டு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் https://eservices.elections.gov.lk  என்ற இணைய தளத்தில், இதற்கான பதிவுகளை மேற்கொள்வதற்குரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பில் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள், தகுதியான இலங்கை பிரஜைகள் தம்மைப் பதிவு செய்ய முடியும்.

வாக்காளர் பட்டியலில், பெயர் பதிவுகளில் உள்ள குறைபாடுகள் அல்லது அச்சுப் பிழைகளை திருத்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு தேர்தல் பட்டியலில் பதிவு செய்யாத வாக்காளர்களை பதிவு செய்தல் போன்றவற்றையும் மேற்படி இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்