அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொவிட் தொற்று: ஹிரு தொலைக்காட்சி நிகழ்சியில் நேற்று கலந்து கொண்டமை தொடர்பில் கேள்வி

🕔 August 3, 2021

மைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என உறுதியாகியுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தான் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்தாக தனது பேஸ்புக் பக்கத்ல்திலும் உறுதி செய்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகே நேற்று திங்கட்கிழமை இரவு ‘ஹிரு’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘சலகுன’ எனும் நேரலை அரசியல் கலந்துரையாடல் நிகழ்சியில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், ‘சலகுன’ நிகழ்ச்சி நடத்துனர் தனிமைப்படுத்தப்படுவாரா என்றும், ஹிரு தொலைக்காட்சி நிலையம் தனிமைப்படுத்தப்படுமா எனவும், சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்