ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது; அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு

🕔 August 3, 2021

சிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவையில் தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களிடம் அவர் பேசியபோது இதனைக் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“இந்தப் பிரச்சனை எமது பிரச்சினை அல்ல. இது கடந்த ஆட்சியில் இருந்த பிரச்சினையாகும். தற்போது எம்மிடம் சம்பளம் அதிகரித்துக் கேட்கின்றனர். அதனை வழங்குவதற்கு பணமில்லை. வரவு – செலவுத் திட்டத்தில் அது குறித்து ஆராய்வோம்.

நாட்டின் நிதிநிலைமைக்கு அமைய அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. எதிர்காலத்தில் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் அந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

தற்போதைய நிலைமை தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்துமாறு கூறப்பட்டது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 56 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. அந்த பணத்தை செலவு செய்வதற்கான சூழல் தற்போது இல்லை.

ஆர்ப்பாட்டம் செய்வது அவர்களது உரிமைகளை. அதனை மறுக்க முடியாது. வரவு – செலவுத்திட்டத்தில் அது குறித்து ஆராய்வோம். ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்