பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களுக்கு ஒன்லைனில் இனி விண்ணிப்பிக்கலாம்

🕔 August 2, 2021

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்ளைப் பெறுவதற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கு இன்று (02) தொடக்கம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

அத்தோடு இந்த பிரதிகளுக்கான கட்டணங்களை கடன் அட்டை (Credit Card) மூலம் செலுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய முகவரி ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் பயனாளர் வழங்கும் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு கட்டணங்கள் செலுத்துவதற்கான இணைப்பு அனுப்பப்படும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சான்றிதழ்களை நேரடியாகவோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்துக்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

இதுதொடர்பான மேலதிக விபரங்களை 011 2 889 518 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்