இந்தியத் துணைத் தூதுவராக ராகேஸ் நடராஜ், யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமையேற்பு

🕔 August 2, 2021

லங்கைக்காக இந்திய துணைத் தூதுவராக ராகேஸ் நடராஜ் யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர், இதற்கு முன்னர் கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் உதவி உயர்ஸ்தானியாராக பணிபுரிந்தார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராக இதற்கு முன்னர் கடமையாற்றிய எஸ். பாலசந்திரன் அங்கிருந்து சென்றமையினையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ராகேஸ் நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் துணைத் தூதுவராகக் கடமையாற்றிய பாலசந்திரன் – வட அமெரிக்க நாடான சுரினாம் குடியரசுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்கும் இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்