தெ.கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு: இணைய வழியில் 04ஆம் திகதி

🕔 August 1, 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 08ஆவது சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 04ஆம் திகதி புதன்கிழமை இணைய வழியில் நடைபெறவுள்ளதாக ஆய்வரங்கின் செயலாளர் கலாநிதி எஸ். றிபா மஹ்ரூப் அறிவித்துள்ளார்.

பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வரங்கில் – பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

‘இஸ்லாமிய மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக நம்பிக்கை சார்ந்த சமூக ஒத்திசைவை ஊக்குவித்தல்’எனும் தொனிப்பொருளில் இவ்வாய்வரங்கு நடைபெறவுள்ளது.

கலாநிதி ஆர்.ஏ. சர்ஜுன் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள மேற்படி ஆய்வரங்கில் பிரதம பேச்சாளராக மலேசிய கெபங்ஸான் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி துணைப் பேராசிரியர் கலாநிதி அஹ்மத் ஸுனாவரி லோங் கலந்து கொள்ளவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் இவ்வாய்வரங்கில் 86 ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்