உக்காத ‘லஞ்ச் சீற்’களுக்கு இன்று முதல் தடை: இருப்பவற்றை பயன்படுத்த ஒரு மாதம் அவகாசம்

🕔 August 1, 2021

பொலித்தீனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகள் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இவற்றின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன தடை செய்யப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ‘லஞ்ச் சீற்’களை மாத்திரம் விற்பனை செய்து கொள்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் ‘லஞ்ச் சீற் ‘தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுற்றாடல் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த ‘லஞ்ச் சீற்’ தடை திட்டத்திற்கு நாட்டிலுள்ள பிரதான வர்த்தக வலையமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன.

தொடர்பான செய்தி: உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகளுக்கு 01ஆம் திகதி முதல் தடை: சுற்றாடல் துறை அமைச்சர் அறிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்