உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்ய, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் ஆர்வம்

🕔 July 28, 2021

த்தினபுரியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர்.

குருந்தம் (வைரத்துக்கு அடுத்தபடியான கடினம் வாய்ந்த கனிப்பொருள்) வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

510 கிலோகிராம் எடை கொண்ட இந்தக் கல் தொகுதி வீடொன்றுக்கு அருகில் கிணறு தோண்டும் போது கிடைத்ததாக தேசிய ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது.

தொடர்பான செய்தி: உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்