உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

🕔 July 27, 2021

லகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் மாணிக்கக் கொத்து, ரத்தினபுரியிலுள்ள வீடொன்றின் கொல்லைப்புறத்தில் – தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவரின் வீட்டில் கிணறு தோண்டும்போது, தொழிலாளர்களால் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளதாக நிபுனணர்கள் கூறுகின்றனர்.

சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் கரட் எடையைக் கொண்டுள்ள இந்தக் கல்லுக்கு ‘செரண்டிபிட்டி சபையர்’ (Serendipity Sapphire) என பெயரிடப்பட்டுள்ளது.

“கிணற்றைத் தோண்டிய நபர் சில அரிய கற்கள் பற்றி எங்கிளிடம் கூறினார். பின்னர் இந்த பெரிய கல்லைக் கண்டு நாங்கள் ஆச்சரியமடைந்தோம்” என்று கல்லின் உரிமையாளர் கமகே தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக தனது முழு பெயரையோ அல்லது இடத்தையோ கொடுக்க அவர் விரும்பவில்லை.

“இவ்வளவு பெரிய கல்லை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இது சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது” என்று புகழ்பெற்ற ரத்தினக் கல் நிபுணர் டொக்டர் காமினி சொய்சா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்தக் கொத்து அதிக கரட் மதிப்பு கொண்டதாக இருந்தாலும், கொத்துக்குள் இருக்கும் அனைத்து கற்களும் உயர்தரமாக இருக்காது என, நிபுணர்கள் கூறுகின்றனர்.

“இது ஒரு சிறப்பு நட்சத்திர நீலக்கல் மாதிரியாகும். இது உலகில் மிகப் பெரியது. அளவு மற்றும் அதன் மதிப்பைக் கருத்தில் கொண்டு, இது தனியார் சேகரிப்பாளர்கள் அல்லது அருங்காட்சியகங்களுக்கு பெற்றுக்கொள்ள ஆர்வப்படுவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று இலங்கையின் தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையத்தின் தலைவர் திலக் வீரசிங்க, கூறினார்.

இலங்கை சுமார் அரை பில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் 10 ஆயிரம் கோடி ரூபா) கடந்த ஆண்டு – ரத்தினக் கற்கள் ஏற்றுமதி, வெட்டப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகள் மூலம் வருவாயாகப் பெற்றுக் கொண்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்