பசில் எம்.பி ஆனாலும், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான தனது நிலைப்பாடு மாறவில்லை என்கிறார் விமல் வீரவன்ச

🕔 July 11, 2021

சில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் நுழைந்த போதிலும், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர் நாடாளுமன்றத்திற்குள் நுழைவது குறித்த தனது நிலைப்பாடு மாறாமல் உள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி வழங்குவதை தான் எதிர்க்கவில்லை என்றும், ஏனெனில் அது ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுனவின் தீர்மானம் எனவும் வீரவன்ச கூறியுள்ளார்.

“இந்த நாட்களில் நீங்கள் ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள்” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விமல் வீரவன்ச; “மௌனமாக இருப்பது கூட, ஒரு செய்திச் சொல்கிறது” என்றார்.

மேலும் “மௌனமும் ஒருவகைக் குரல்தான்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்