பிரதேச சபை உறுப்பினர் மரணம்: தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

🕔 July 11, 2021

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவான கொடிகாமம் ராமாவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜன் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.

அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகுமார் கஜன் – யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்