மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி: புதிய வழிகாட்டியை வெளியிட்டது சுகாதார அமைச்சு

🕔 July 10, 2021

கொரோனா நோய் தொற்றை கருத்திற் கொண்டு, நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்றை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாடுகள் இன்று(10) முதல் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தைடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண வைபவங்களையும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மண்டபக் கொள்ளளவில் 25 சதவீதமானோருடன் மட்டுமே நடத்த முடியும்.

அதாவது அதிகபட்சமாக 150 பேருடன் திருமண வைபவங்களை நடத்த முடியுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, 05ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில், கடந்த 04ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Comments