சகோதரரின் அமைச்சுப் பதவி, பசில் வசமானது

🕔 July 8, 2021

நிதி அமைச்சராக சற்று முன்னர் பசில் ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று வியாழக்கிழமை காலை, இந்தப் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக நிதியமைச்சர் பதவி – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார விவகார மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சுப் பதவியே பசிலுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எவ்வாறாயினும், தனது சகோதரரின் வசமிருந்த அமைச்சுப் பதவி, தற்போது பசில் ராஜபக்ஷவிடம் சென்றுள்ளது.

இதேவேளை, பொருளாதார கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்