பொருளாதார கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகிறார் பசில்?

🕔 July 8, 2021

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் எனும் பெயரில் புதிய அமைச்சொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இன்னும் சற்று நேரத்தில் இந்த அமைச்சினை ஜனாதிபதி முன்னிலையில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னராக, அமைச்சுப் பதவியினை பசில் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரியவருகிறது.

நாடாளுமன்றில் முன் இருக்கையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, அமைச்சர் பதவியை முன்னதாக பசில் ஏற்றுக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்