மருதமுனை வீடொன்றில் இருந்து எம்16 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் மீட்பு: சந்தேக நபரும் கைதானார்
🕔 July 7, 2021
– பாறுக் ஷிஹான் –
வீடொன்றில் இருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி ஒன்றினை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 05ஆம் கிராம சேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில் உள்ள வீடொன்றின் கூரையில் எம்-16 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இன்று (7) மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றதுடன் அவ்வீட்டில் இருந்து 54 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.