நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று கையளிக்கப்படும்; பந்துல

🕔 November 26, 2015

Ravi karunanayaka - 013நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மாணம் ஒன்றினை எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ளன.

பொய்யான தரவுகளை முன்வைத்து 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளன.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று வியாழக்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரச தலைவர், நாடாளுமன்றம், மற்றும் பொதுமக்களை வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக ஏமாற்றியுள்ளனர்.

எனவே, திட்டமிடாமல் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்ட செயற்பாட்டை கண்டித்து, நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்காக உண்மையான எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடனான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, தமக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானமானது சவாலான ஒரு விடயமல்ல என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சோனையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்