நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷவை அறிவித்து, வர்த்தமானி வெளியானது

🕔 July 7, 2021

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த கெட்டகொட தனது பதவியை நேற்று ராஜினாமா செய்து கொண்டதை அடுத்து அப்பதவிக்காக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகும் பொருட்டு, ஜயந்த கெட்டகொட ராஜிநாமா செய்ததாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரயவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளை 08ஆம் திகதி பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்