றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை: நான்காவது நீதியரசரும் விலகினார்

🕔 July 5, 2021

க்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் – உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமில் இருந்து மற்றொரு நீதியரசரும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அந்த வகையில் குறித்த மனு மீதான பரிசீலனையிலிருந்து நான்கு நீதியரசர்கள் விலகியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 70 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்து றிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஸ் ஆகியோர் – உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான பரிசீலனை இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதியரசர் மஹிந்த சமயவர்த்தன இதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஏற்கனவே, நீதியரசர்கள் யசந்த கோட்டாகொட, ஜனக டி சில்வா மற்றும் திலீப் நவாஸ் ஆகியோர் இந்த வழக்கிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 08ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்