அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமனம்

🕔 June 30, 2021

– முன்ஸிப் அஹமட் –

லங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இந்தப் பதவி உயர்வு அவருக்கு கிடைத்துள்ளது.

சுங்கத் திணைக்களத்தில் பணிப்பாளர் நாயகம் பதவியானது தற்போது அரசியல் ரீதியாக வழங்கப்படுகின்றமையினால், மேலதிக பணிப்பாளர் நாயகம், அங்கு உச்ச பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

1984ஆம் ஆண்டு சுங்க அதிகாரியாக இணைந்து கொண்ட இவர், அதன் பின்னர் பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று, தற்போதைய நிலையை அடைந்துள்ளார்.

சட்ட முதுமாணியான நியாஸ், ‘CASE LAWS OF CUSTOMS’ எனும் நூலையும் எழுதியுள்ளார்.

அட்டாளைச்சேனையின் முலாவது பட்டதாரியான சம்சுத்தீன் (பி.எஸ்.சி) மற்றும் ரகுமத்தும்மா தம்பதியரின் புதல்வரான இவர், தனது பாடசாலைக் கல்வியை அட்டாளைச்சேனை அல் – முனீறா வித்தியாயலம், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றுக் கொண்டார்.

பொத்துவில் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற டொக்டர் எம்.ஏ. ஜலால்தீன் இவரின் சிறிய தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்