எக்ஸ்-பிரஸ் பேள் கப்பல் தீ விபத்து காரணமாக 176 ஆமைகள் இறப்பு: சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

🕔 June 30, 2021

க்ஸ்-பிரஸ் பேள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 176 க்கும் மேற்பட்ட ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் 04 திமிங்கிலங்கள் இறந்துள்ளன.

இதனை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை கப்பல் தீப்பற்றியமையினால் ஏற்பட்ட இழப்புக்கு இலங்கைக்கு 700 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு வழங்க, எக்ஸ்-பிரஸ் பேள் கப்பலின் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் கொழும்பு கடற்கரையில் ரசாயனங்களுடன் சரக்குகளை ஏற்றிச் சென்ற எக்ஸ்-பிரஸ் பேள் கப்பல் தீப்பிடித்தது.

இதன்போது சரக்குகளுடன் கூடிய எட்டு கொள்கலன்கள் கடலில் விழுந்தன. அதன் பின்னர் இலங்கை கரையோரத்தில் கப்பலில் இருந்த கழிவுகள்கரை ஒதுங்கின.

குறித்த கப்பல் இறுதியில் நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்