அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது கொவிட் தொற்றாளர் சுகமடைந்து வீடு திரும்பினார்

🕔 June 29, 2021

– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இயங்கும் கொவிட்-19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் – பூரண சுகமடைந்து வீடு திரும்பினார்.

இதன்போது கொவிட் -19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து குறித்த நபருக்கு நினைவுப் பரிசு வழங்கும் பொருட்டு தாதிய உத்தியோகத்தரிடம் அதனைக் கையளித்தனர்.

இடத்தங்கல் பராமரிப்பு நிலையத்தினால் வழங்கப்பட்ட குறித்த நினைவுச் பரிசை, பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சைபெறும் பிரிதொருவர், சுகமடைந்த நபருக்கு வழங்கி வைத்தார்.

கடந்த 19ஆம்திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மேற்படி நபர், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இயங்கும் கொவிட்-19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தில் இம்மாதம் 23ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்