அம்பியுலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய நபர் கைது

🕔 June 29, 2021

ம்பஹா வைத்தியசாலைக்குச் சொந்தமான ‘அம்பியுலன்ஸ்’ வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பியுலன்ஸ் சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அம்பியுலன்ஸ் சாரதியும் இதன்போது தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடவத்த – பஹலபியன்வில பகுதியைச் சேர்ந்த 65 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற போது சந்தேக நபர் மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்