அமைச்சர் பதவி எதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: மைத்திரி தெரிவிப்பு

🕔 June 28, 2021

அமைச்சராக தான் பதவி ஏற்றுக் கொள்ளவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவி எதனையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் மைத்திரியும் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சர் பதவி வழங்குமாறு அரசாங்கத்திடம் தான் கேட்டதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பதவி வழங்கும் என்ற எதிர்பார்ப்பு கிடையாது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்