கிரகரி வரண்டதால், உல்லாசப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி

🕔 November 25, 2015

SAMSUNG CAMERA PICTURES
– க. கிஷாந்தன் –

நுவரெலியா கிரகரி வாவி திறக்கப்பட்டு – நீரின்றி வரண்டு காணப்படுவதால், அப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் வீழ்ச்சியடைந்தள்ளது.

நுவரெலியா நகரத்துக்கு அழகு சேர்ப்பதோடு, உல்லாச பயணிகளை கவரும் வகையில் கிரகரி வாவி அமைந்துள்ளது.

தற்போது, வாவி வரண்டு காணப்படுவதன் காரணமாக, உல்லாச பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதோடு, பிரதேசமும் பொலிவிழந்து காட்சியளிக்கின்றது.

இந்த நிலையினால், இப்பகுதியைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிரகரி வாவி புனரமைக்கபடுகின்றமையினாலேயே நீர் திறக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். செப்பணியிடும் பணிகள் நிறைவடைந்ததும், மிகவிரைவில் வாவிற்கு நீர் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.Giragari river - 098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்