‘நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’; துமிந்த விடுதலை குறித்து, பாரத லக்ஷ்மன் மனைவி கண்டனம்

🕔 June 24, 2021

ரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவின் மனைவி சுமணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவை கொலை செய்தமைக்காக, துமிந்த சில்வாவுக்கு 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

‘கொலையாளி விடுவிக்கப்பட்டுளார்; நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’ என்று, துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமை குறித்து சுமணா பாரத லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரும், உச்ச நீதிம்ற நீதியரசர்கள் ஐவரும் வழங்கிய தீர்ப்புகளை புறக்கணிப்பதன் மூலம், நீதித்துறையை மதிக்காத நாடாக இலங்கை மாறியுள்ளது என்றும், அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் இன்று புனித பொசன் தினத்தில், இந்த அநீதி நடந்துள்ளது என்றும் பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவின் மனைவி சுமணா தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்