தெஹிவளை மிருகக் காட்சி சாலையில், மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு

🕔 June 24, 2021

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவிலிருந்து 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 11 வயதுடைய தோர் எனும் ஆண் சிங்கம் தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்